சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் நூற்றுக்கணக்கில் டால்பின்கள்! வைரலாகும் வீடியோ!

சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் புதன்கிழமை பல் டால்பின்கள் காணப்பட்டன. காலை கடல் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான டால்பின்களைப் பார்க்க முடிந்தததாகத் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

நீலாங்கரை கடற்கரை பகுதியில் டால்பின்கள் வந்திருப்பது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கடற்கரைக்கு வந்து, கடல் அலைகளுகுக இடையே டால்பின்கள் தெரியும் காட்சியைப் பார்த்துச் செல்கின்றனர்.

கடல் அலைகளுக்கு இடையே டால்பின்கள் தோன்றி மறையும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. டால்பின்கள் துள்ளிக் குதிக்கும் அழகிய காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றறர்.

இந்த அற்புதமான காட்சியைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுவதாக ஒரு பயனர் தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் கடல் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும்போது டால்பின்கள் தோன்றுவது ஆச்சரியமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

சென்னை கடல் பகுதியில் டால்பின்கள் தென்படுவது முதல் முறை அல்ல. கடந்த 2021ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் டால்பின்கள் தென்பட்டன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *