இது தெரியுமா ? அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் இந்த காய்கறி சாப்பிடக்கூடாது..!
முருங்கைக்காய் ;
என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
கத்தரிக்காய் ;
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
மாங்காய் ;
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய் ;
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய் ;
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய் ;
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய் ;
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய் ;
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
- யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.