வறட்டு இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதை ட்ரை பண்ணி பாருங்க.!

ற்போது குளிர்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நிலையில் இந்த வறட்டு இருமலை சரி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

சித்தரத்தை

அதிமதுரம்

கடுகு

வெந்தயம்

செய்முறை:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள 4 பொருட்களையும் வறுத்து நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

அப்படி இல்லையென்றால், இந்த பொடியை ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து முழு நிவாரணம் தரும். இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *