மேற்கு வங்க முதல்வர் சென்ற கார் விபத்து : தலையில் காயம்..!
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் இலேசாக காயமடைந்தார்.கொல்கத்தாவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் விபத்துக்குள்ளானதில் மம்தா பானர்ஜி காயம் அடைந்தார். எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது இருக்கையின் முன்பகுதியில் மம்தாவின் தலை இடித்து காயம் ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது.
இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது சிறிய விபத்து நடந்துள்ளது.