உஷார்… மனிதனைப் போலவே பேச்சு… மோசடி செய்யும் AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பம்!

AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பத்தை (AI voice cloning technology) பயன்படுத்தி மோசடிக்காரர்கள் டார்கெட் செய்யப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குறிய நபர்களைப் போல நடித்து அவர்களின் பணம் அல்லது தனிநபர் விவரங்களை திருடி வருவது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. எனினும் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

நீங்கள் கவனிக்க வேண்டிய நான்கு அபாயகரமான அறிகுறிகள்:

எதிர்பாராத போன் கால்கள்:

உங்களது உடன் பணிபுரிபவர்கள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து வழக்கத்திற்கு மாறான நேரங்களில் இருந்து போன் கால்கள் வரும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள்.

அவசர கோரிக்கைகள்:

பெரும்பாலான நேரங்களில் மோசடிக்காரர்கள் உங்களை விரைவான முடிவுகள் எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள்.

உங்களுடைய அன்புக்குரியவர்கள் பிரச்னையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக பணம் தேவை என்பது போன்ற பொய்யையும் சொல்வார்கள்.

இயற்கைக்கு மாறான பேச்சு:

AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பம் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், அது இன்னும் மனிதனைப் போல அச்சு அசலாக மாறவில்லை. எனவே ரோபோடிக் போன்ற பேச்சு அல்லது விசித்திரமான உச்சரிப்பு போன்றவை ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலமாக நீங்கள் ஒரு உண்மையான நபரிடம் பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

பணம் அல்லது தனிநபர் தகவலுக்கான கோரிக்கை:

உங்களுக்கு தெரியாத மற்றும் நீங்கள் நம்பாத ஒரு நபரிடம் ஒருபோதும் பணமோ அல்லது சோஷியல் செக்யூரிட்டி நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை போன் மூலமாக தர வேண்டாம். எந்த ஒரு நியாயமான நிறுவனமும் இது போன்ற தகவல்களை போனில் கேட்காது.

பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகள்:

தெரியாத நபர்களிடமிருந்து வரும் போன் கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். ஒருவேளை உங்களால் போன் நம்பரை அடையாளம் காண முடியவில்லை என்றால், அது வாய்ஸ் மெயிலுக்கு செல்லட்டும். அது முக்கியமானதாக இருந்தால் அவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம் மற்றும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைக்கலாம்.

காலரின் அடையாளத்தை சரி பார்க்கவும்:

உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபரிடம் இருந்து வரக்கூடிய ஒரு போன் காலுக்கு நீங்கள் பதில் அளித்தால், கட்டாயமாக அது அவர்கள் தான் என்று ஊகிக்க வேண்டாம். உண்மையாகவே அது அவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். உதாரணமாக நீங்கள் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு நகைச்சுவை அல்லது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

விரைவான முடிவை எடுப்பதற்கான அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்:

உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து பின் வாங்கி சற்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். இந்த விஷயம் குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் என்று காலரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக யோசிக்கவும்.

மோசடியை புகார் அளிக்கவும்:

நீங்கள் ஒரு AI வாய்ஸ் குளோனிங் மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கவும்.

ஆன்லைனில் நீங்கள் என்ன ஷேர் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்:

உங்களையும் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களைப் போல நடித்து மோசடிக்காரர்கள் ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் சோஷியல் மீடியா மற்றும் பிற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் என்னென்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கால் பிளாக்கிங் அப்ளிகேஷன் பயன்படுத்தவும்:

தேவையற்ற கால்களை பிளாக் செய்யக்கூடிய ஏராளமான கால் பிளாக்கிங் அப்ளிகேஷன்கள் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *