ஷாக்கிங் நியூஸ்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா(30) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கே.பி.அன்பழகனின் மருமகள் கடந்த 18ம் தேதி தருமபுரி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.