12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரூ.31,000 சம்பளம்.. சென்னை விமான நிலையத்தில் வேலை..
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட விமான நிலைய மண்டலங்களில் காலியாக உள்ள முதுநிலை மற்றும் இளநிலை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (26.01.2024) விண்ணப்பித்து கொள்ளலாம். இதன் மூலம் மொத்தம் 119 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்த காலியிடங்கள் விவரம் :
ஜூனியர் அசிஸ்டெண்ட் (தீயணைப்பு) : 73 காலியிடங்கள்
ஜூனியர் அசிஸ்டெண்ட் ( அலுவலகம்) : 2 காலியிடங்கள்
சீனியர் அசிஸ்டெண்ட் (எலக்ட்ரானிக்ஸ்) : 25 காலியிடங்கள்
சீனியர் அசிஸ்டெனண்ட (அக்கவுண்டஸ்) : 19 காலியிடங்கள்
ஜூனியர் அசிஸ்டெண்ட் (தீயணைப்பு துறை)
கல்வித்தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி, மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.31,000
ஜூனியர் அசிஸ்டெண்ட் (அலுவலகம்)
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.31,000
சீனியர் அசிஸ்டெண்ட் எலக்ட்ரானிக்ஸ் :
கல்வித்தகுதி : எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.36,000
சீனியர் அசிஸ்டெண்ட் (அக்கவுண்டஸ்) :
கல்வித்தகுதி பி.காம் படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.36,000
வயது வரம்பு : 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.aai.aero/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2024