டாஸ் வென்ற இங்கிலாந்து.. 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய ரோகித் சர்மா.. இந்திய அணிக்கு பின்னடைவு!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், முதல் நாளில் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.

இதனை மனதில் வைத்தே இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பேஸ் பால் அணுகுமுறையுடன் இங்கிலாந்து அணி அட்டாக்கிங் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வருவதால், எந்தவித அழுத்தமும் இல்லாமல் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றே அறிவிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டு, விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணி ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கியுள்ள நிலையில், இந்திய அணி பும்ரா மற்றும்ச் சிராஜ் என்று 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

டாஸின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்களும் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம். இந்த பிட்ச் கொஞ்சம் வறண்டு காணப்படுகிறது. ஆனால் எங்கள் வீரர்களிடம் திறமை இருப்பதால், நிச்சயம் வேலையை சரியாக செய்து முடிப்பார்கள். முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறேன். நிச்சயம் இந்த டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்க போகிறது.

இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பிடிப்பதற்கு கூடுதல் தைரியமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம். குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் இருப்பது கடினமான முடிவு தான். ஆனால் அக்சர் அடேலுடன் களமிறங்கிய போதெல்லாம் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதன் காரணமாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *