இந்துக்கள் அப்படியே இருக்கனுமா?ஆன்மீக பற்றை வெளிப்படுத்தினால் பாய்கிறார்களே.. சர்ச்சையில் ரேவதி!

அண்மையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில், நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்துக்கள் அப்படியே இருக்கனுமா? ஆன்மீக பற்றை வெளிப்படுத்தினால் பாய்கிறார்களே என பதிவிட்டு இருந்தது இணையத்தில் புயலை கிளப்பி உள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலை, சடங்குகள் பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை 3 மணி முதலே திரளான பக்தர்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரேவதியின் பதிவு: இந்நிலையில், நடிகை ரேவதி அயோத்தி கோவில் திறப்பு குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது ஒரு மறக்க முடியாத நாள். அயோத்தி கோயிலுக்குள் குழந்தை ராமர் வருவதை பார்த்த போது எனக்குள் எழுந்த உணர்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனக்குள் ஒருவித கிளர்ச்சி உருவானது.

உங்களை யார் தடுத்தது: இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்துக்களாக இருப்பவர்கள், நமது மத நம்பிக்கைகளை நமக்குள் மட்டுமே வைத்திருக்கிறோம். பிறர் மத உணர்வுகளை புண்படாதவாறு பார்த்துக் கொண்டே இருக்கிறோம். மதசார்பற்ற இந்தியாவில், நமது ஆன்மீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிலை காணப்படுகிறது. ஸ்ரீராமரின் வருகை இந்த விஷயத்தை மாற்றியிருக்கிறது. ராமரின் பக்தர்கள் நாம் என்பதை முதன்முதலாக சத்தமாக சொல்வோம். ஜெய் ஸ்ரீராம் என தனது பதிவில் ரேவதி கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி புயலை கிளப்பி வரும் நிலையில் இணையவாசிகள் சிலர், இத்தனை நாட்கள் உங்களை யார் தடுத்தது என்று ரேவதியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், சிலர் உங்களை பின் தொடர்வதை நிறுத்துவதாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *