அம்மாவோட கடைசி நிமிஷம்..எனக்குனு யாருமே இல்ல.. பேச முடியாமல் கதறி அழுத பவித்ரா!
நடிகை பவித்ரா, தற்போது பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இவர் தனது நண்பரும் பாடகருமான ஆதித்யாவுடன் இணைந்து பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த பாடலை தவிர இன்னும் சில ம்யூசிக் நிறுவனங்களுக்கு பாடல்களையும் எழுதி வரும் பவித்ரா, யூடியூப் சேனல் ஒன்றில் தனது அம்மா இறப்பு குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் தான் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து, 3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி மற்றும் மலையாள படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.
அதன் பிறகு பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்து வந்த பவித்ரா லட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா லக்ஷ்மிக்கு சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.
பாடலாசிரியர்: இந்நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி தற்போது பாடலாசிரியர் என்ற புது அவதாரத்தை எடுத்திருக்கிறார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவித்ரா, என் அம்மாவிற்கு நான் நடிப்பதை விட கவிதை, பாடல் எழுதுவது ரொம்ப பிடிக்கும், இதனாலேயே பாடல் மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. இதனால், சின்ன சின்ன கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்றார்.
கடைசி நேரத்தில் கூட இல்லை: மேலும், கடந்த ஆண்டு மே மாதத்தில் உடல்நல குறைவால் அம்மா இறந்துவிட்டார்கள். அப்போது, நான் காசியில் இருந்தேன். அந்த கடைசி நேரத்தில் கூட நான் அம்மா கூட இல்லை. அம்மாவை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்வதற்கான வேலைகளை என் நண்பர்கள் தான் செய்தார்கள். அந்த நேரத்தில் என் நண்பர்கள் மட்டும் இல்லை என்றால் என் நிலைமை என்னவாகி இருக்கும் என்றே தெரியவில்லை என நடிகை பவித்ரா லட்சுமி கண்கலங்கி பேச முடியாமல் அழுதார்.
இப்போது எனக்குனு யாருமே இல்லை, எனக்காக நான் ஓடித்தான் ஆக வேண்டும். எனக்கும் சொகுசாக வீட்டில் இருந்து அப்பா அம்மா கொடுக்கும் பணத்தை வாங்கிட்டு ஜாலியா செலவு செய்ய ஆசைதான். ஆனால், எனக்காக நான் போராடி ஆகவேண்டும் என்றார்.