காரணம் கூறாமல் பைட்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்த வளைகுடா நாடுகள்
மும்பை: வளைகுடா நாடுகளில் ‘ஃபைட்டர்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.
‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நாளை (ஜனவரி 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வான்வழியில் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபைட்டர்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் ‘ஃபைட்டர்’ திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து இயக்குனர் சித்தார்த் கூறியதாவது:- ‘ஃபைட்டர்’ லட்சியம் கொண்ட படம். 2024-ம் ஆண்டு மீண்டும் அதே பதட்டத்துடன் தொடங்குகிறது. பதான் மீது பொழிந்த அதே அன்பை ஃபைட்டருக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.