தங்கையின் நிச்சயதார்த்த விழா புகைப்படங்களை பகிர்ந்த சாய் பல்லவி!
நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
தற்போது, சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பத்துடன் நடனமாடி சாய் ப்லலவியின் விடியோ வைரலானது.
இந்நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.