Vidaa Muyarchi: விடாமுயற்சி டீமுடன் டின்னர்! பிளாக் சூட்டில் ஸ்டைலிஷ் ஆன அஜித்குமார் – வைரல் புகைப்படம்
ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் என எதுவாக இருந்தாலும் அஜித்தின் லுக்கில் இயல்பாகவே ரிச்னஸும், ஸ்டைலிஷ் கலந்து இருக்கும்.
அந்த வகையில் விடாமுயற்சி படத்துக்காக அஜர்பைஜான் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் அஜித்தின் புதிய லுக் சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில் ஷுட்டிங் ஸ்பாட் லீக் புகைப்படங்கள், அஜித்தின் லுக் போன்ற எந்த படங்கள் விடியோக்கள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பிளாக் சூட், பிளெசர், கூலிங் கிளாஸ், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள் பயர் விட்டு வருகின்றனர்.
படத்தில் நடித்து வரும் ஆரவ், படக்குழுவினருடன் பாகு நகரில் அஜித்குமார் டின்னர் சென்றுள்ளார். இந்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேணி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா. ரெஜினா, அர்ஜுன், ஆர்வ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லியோ படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய் த்ததும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து படக்குழுவினர் எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக, அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். அத்துடன் முதல் முறையாக மகிழ் திருமேனியுடன் கைகோர்த்துள்ளார்.
விடாமுயற்சி படத்திலும் அஜித்தின் கார் சேஸிங் காட்சிகளை ஹைலைட்டாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக விடாமுயற்சி உள்ளது. அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் பொங்கலை முன்னிட்டு துணிவு படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் படம் எதுவும் வெளியாகாத நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.