`கேலி செய்வது துன்புறுத்தல் ஆகாது” -தற்கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு..!
கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாள்களில் அப்பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர், அந்தப் பெண் சரியாக சமைக்கவில்லை, வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்று கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.
வாக்கிங் செல்லாமல் நீரிழிவைக் கட்டுப்படுத்த வாய்ப்பே இல்லையா?
இந்நிலையில் 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மாமியார், மைத்துனர் மற்றும் கணவர் மோசமாக நடந்துகொண்டதாலும், பிறந்த வீட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தியதாலும் விரக்தியடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் சுவையான உணவைத் தயாரிக்காதது, காலையில் சீக்கிரம் எழுந்திருக்காதது, துணி துவைக்காதது, அதிகமாக சாப்பிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் அந்தப் பெண் கேலி செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தனர். தற்கொலைக்குத் தூண்டியதற்காக அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.