பூஜ்ஜியமான நீட் கட் ஆப்! மருத்துவப் படிப்பில் பணக்காரர்கள் ராஜ்ஜியம்?

யர் சிறப்புப் படிப்பு கலந்தாய்வுக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைத்ததற்குக் கல்வியாளர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இதனால் நீட் தேர்வுக்காக நோக்கம் முழுமையாகச் சிதைந்துபோய் விட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அவற்றில் காலியாக சுமார் ஆயிரம் இடங்கள் உள்ளன.

அவற்றை நிரப்புவதற்காக ‘நீட்’ கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாகக் குறைந்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெற்ற மாணவர்கள் ‘பணம் இருந்தால் யாரும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலையே உள்ளது’ என விமர்சித்திருந்தனர்.

கலந்தாய்வுக்கான சதவீத மதிப்பானது கடந்த டிசம்பரில் 50இல் இருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது. அதற்கே கடும் கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை தனியார் கல்லூரிகளுக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கும் சாதகமாகவே அமையும் எனக் கல்வியாளர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

பூஜ்ஜியம் கட் ஆப் எடுத்தாலே தகுதி பெற்றுவிடலாம் என்றால், இந்த நீட் தேர்வின் நோக்கம்தான் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *