பொன்னி சீரியல் நடிகைக்கு வளைகாப்பு விழா..! குவியும் வாழ்த்துக்கள்!
’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
’தங்கம்’, ‘சிவசங்கரி’, ‘இளவரசி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பொன்னி சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். அதிகம் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீதேவிக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அசோக் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே சித்தாரா என்ற மகள் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் ஸ்ரீதேவி.
உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் சூழ, வளைகாப்பு நிகழ்ச்சியை மிக எளிமையாக வீட்டிலேயே நடத்தியிருக்கிறார். இந்நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், தன் கணவருடன் இணைந்து நடிகை ஸ்ரீதேவி க்யூட்டாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘ஐந்தாவது மாத பூச்சூட்டல் வளைகாப்பு நிகழ்ச்சி சந்தோஷமாக நடந்தது’ எனக் கூறி வீடியோவை பகிர்ந்திருக்கும் ஸ்ரீதேவிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.