பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நோபல் ஜோஸ் காலமானார்..!

‘என் மேழுதிரி அதழங்கள்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நோபல் ஜோஸ். இந்தப் படத்தில் அனூப் மேனன் மற்றும் மியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் தனது உணவகத்தில் இந்திய உணவு வகைகளைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரிஸைச் சேர்ந்த மலையாளி சமையல்காரரைச் சுற்றி வருகிறது.

வி.கே.பிரகாஷ் இயக்கிய நோபலின் இரண்டாவது படமான ‘மெட்ராஸ் லாட்ஜ்’ அதே ஆண்டில் வெளியானது. தொடர்ந்து விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடித்த ‘கிருஷ்ணன்குட்டி பனி துடங்கி’, விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் திலீஷ் போத்தன் நடித்த ‘சாலமன்’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.

இந்த நிலையில், கொச்சியில் வசித்து வந்த நோபல் ஜோஸ் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான திருப்புனித்துராவில் வைக்கப்பட்டு பின் நல்லடகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இரவது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *