இனி தோல்வியடைந்த UPI பேமெண்ஸ்ட்களுக்கு 2 நிமிடங்களில் ரீஃபண்ட்… சூப்பர் அறிவிப்பு

இன்றைய மாடர்ன் உலகில் அனைத்துமே மாறிவிட்டது. எங்கு சென்றாலும் பர்சை மறந்து விடாமல் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால் இப்பொழுது மொபைல் ஃபோன் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலைமை ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் பேமெண்ட் முறை. ஆனால் இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறையிலும் பல்வேறு விதமான குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. UPI ட்ரான்ஸாக்ஷன்கள் தோல்வி அடைந்து விட்டால் அதற்கான ரீஃபண்ட் தொகை பெறுவது பெரும் பாடாக இருந்து வருகிறது. இதற்கு RazorPay நிறுவனம் ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளது. இது குறித்து இங்கே விளக்கமாக பார்க்கலாம்.

ஃபெயிலியர் ஆன அதாவது தோல்வியடைந்த யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (unified payments interface – UPI) ட்ரான்ஷாக்ஷன்களுக்கு உடனடி ரீஃபண்ட் வழங்குவதற்காக சமீபத்தில் ஃபின்டெக் பிளாட்ஃபார்ம் ஆன Razorpay முதல் முறையாக இன்ஸ்டன்ட் ரீஃபண்ட் (instant refunds) அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Razorpay POS வழங்கும் தீர்வானது தோல்வியடைந்த யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ட்ரான்ஸ்ஷாக்ஷன்ளுக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் உடனடியாக ரீஃபண்டு தொகைகளை வழங்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தோல்வி அடைந்த UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கான ரீஃபண்ட் தொகை பெறுவதற்கு 5 முதல் 6 வேலை நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களிடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 5 முதல் 15 சதவீதம் வரையிலான UPI ட்ரான்ஸ்ஷாக்ஷன் பெண்டிங் ஸ்டேட்டஸை காட்டுகின்றன. இது மாதிரியான சூழலில், கஸ்டமர்கள் UPI மூலமாக இரண்டு முறை பேமெண்ட் செலுத்தவோ அல்லது வேறு எந்த முறையை பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தவோ தயாராக இல்லாத காரணத்தினால் 30 முதல் 40% வரையிலான பாதிப்புகளில் வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது” என்று Razorpay POS, CEO பயாஸ் நம்பீசன் கூறுகிறார்.

“இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி கட்டுவது எங்களுக்கு சவாலான காரியமாக இருந்தது. எனினும் இந்த இன்ஸ்டன்ட் ரீஃபண்ட் அம்சம் மூலமாக கஸ்டமர்களின் திருப்தி, நம்பிக்கை மற்றும் விரிவான செக்-அவுட்டுகளை எங்களால் நிலைநாட்ட முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், Razorpay POS 2023 நிதி ஆண்டில் 60 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக அறிவித்திருந்தது. இது கிட்டத்தட்ட நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் 10% பங்களித்துள்ளது. Lone Pine Capital, Alkeon Capital, TCV, GIC, Tiger Global, Sequoia Capital India, Ribbit Capital, Matrix Partners, Salesforce Ventures, Y Combinator மற்றும் MasterCard போன்ற முதலீடாளர்கள் Razorpay நிறுவனத்தில் இதுவரை $741.5 மில்லியன் முதலீடு செய்துள்ளனர்.

2023-ஆம் ஆண்டில், UPI பிளாட்ஃபார்ம் மூலமாக செய்யப்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் 100 பில்லியனை கடந்து 118 பில்லியனை அடைந்தது. கடந்தாண்டு 74 பில்லியன் ட்ரான்ஸாக்ஷன்களுடன் 60% வளர்ச்சி அடைந்து இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது என்ற தகவலை நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India – NPCI) வெளியிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *