வடநாட்டவருக்கு திருச்சி கொடுத்த வாழ்க்கை.. 2 கோடி ரூபாய் சம்பளம் பாஸ்.. சும்மா இல்ல..!!
தோல்விகள் வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர்களில் ஒன்றாகும் என்பது ஒரு பிரபலமான பழமொழி, இங்கு உண்மையில் 35 முறை தோல்வி அடைந்து கடும் போராட்டித்திற்கு பின்பு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலையை தட்டி தூக்கியுள்ளார் ஒரு இளைஞன்.
10,000 ரூபாய் சம்பாதிப்பதில் இருந்து 1.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, பிறகு தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றியை அடைய, கடும் நெருக்கடிகளைச் சந்தித்த மனு அகர்வாலின் உத்வேகமான வாழ்க்கைக் கதை இது உண்மை என்பதை நிரூபித்தது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சியைச் சேர்ந்த மனு அகர்வால், இந்தி-வழி அரசுப் பள்ளியில் படித்தார். அங்கு அவர் தனது அடிப்படைக் கல்வியைப் பெற்றார். சராசரி மாணவரான அவர் கணிதத்தில் சிரமப்பட்டவர்.
அதன்பிறகு, அவர் AIEEE தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற பிறகு பிசிஏ (பேச்சுலர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பண்டேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இருப்பினும், இடையில் மனு அகர்வால் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் குறைந்தது 35 நிறுவனங்கள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டன.ஆனால், அவர் தனது முயற்சிகளில் சிறிதும் மனம் தளராமல் இருந்தார்.
இதன் காரணமாக அவர் விப்ரோவில் 10,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை பெற்றார். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அதன்பிறகு 2016 இல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இன்டர்ன்ஷிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அவர் ரூ.1.9 கோடி மதிப்புள்ள பெரும் சம்பளப் பேக்கேஜுக்கு பணியமர்த்தப்பட்டார்.
குறுகிய காலத்தில் வெற்றியின் உச்சியை அடைந்தாலும், மனு அகர்வாலுக்கு பெரிய சிறந்த கனவுகள் இருந்தன. தனக்கென்று சுயமாக ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.திருச்சி மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1000 கோடி முதலீடு, 250 ஏக்கர் மெகா திட்டம்..!! இந்த நிலையில் கோவிட்-19 காலத்தில் அவர் இந்தியா திரும்பியபோது, இந்தியாவில் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.அதன்பிறகு, அவர் தனது நண்பர் அபிஷேக் குப்தாவுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் டுடோர்ட் அகாடமி (Tutort Academy) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.