பட்ஜெட் அறிக்கை ரெடி.. நிர்மலா சீதாராமன் நடத்திய ஹல்வா விழா..!
நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால யூனியன் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் ஹல்வா விழா இன்று நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பின் “லாக்-இன்” செயல்முறை தொடங்கும் முன் ஒரு வழக்கமான ஹல்வா விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் போது நடக்கும் இந்த ஹல்வா விழாவில், இன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், இது ஆண்டுப் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை எப்படியிருக்கும் எனப் பல கணிப்புகள் வெளியாகி வருகிறது.இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால். புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு பிற்பகுதியில் முழுப் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.இடைக்காலப் பட்ஜெட் என்பதால் கவர்ச்சியான அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் சிறிய வரி நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் சில நல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரிச் சலுகைகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வழக்கம் போல் அதிகரித்துள்ளது.பட்ஜெட்-ல் வரிக் குறைப்புக் கட்டாயம் இருக்கு.. நிர்மலா சீதாராமன் சொல்லப்போகும் குட் நியூஸ்..!
இந்த நிலையில் முந்தைய மூன்று முழு மத்திய பட்ஜெட்களைப் போலவே, 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டும் காகிதமற்ற டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.நிதி அமைச்சகம் ஜனவரி 24 அன்று வெளியிட்ட அறிக்கையில், அனைத்துப் பட்ஜெட் ஆவணங்களும் ‘யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்’ டிஜிட்டல் முறையில் கிடைக்கும் என்றும், அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியது.