இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! சின்ன வெங்காயம் கிலோ ரூ.15க்கு விற்பனை..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் போதுமானதாக இல்லை.
இதனால், பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 100 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ. 240 முதல் ரூ. 300 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர், ஓரளவுக்கு மழையின் அளவு குறைய தொடங்கியதும் வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்து வந்தன.
அந்த வகையில், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சின்ன வெங்காயத்தின் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை மொத்தமாக சரிவடைந்துள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டில் கிலோ ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தரத்தை பொறுத்து வெவ்வேறு பகுதிகளில் கிலோ ரூ.15 முதல் ரூ.35 வரையில் மட்டுமே விலை போவதால் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.