தைப்பூசம் 2024: பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்களை நீங்கள் அறிந்ததுண்டா?
பழநி முருகன்
தைப்பூசத்தில் முதல்நாள் (கொடியேற்றம்):- புதுச்சேரி சப்பரம்
2ம் நாள்:- வெள்ளி ஆட்டுகிடா வாகனம்
3 மற்றும் 4ம் நாள்:- வெள்ளி காமதேனு வாகனம்
5ம் நாள்:- வெள்ளி யானை
6ம் நாள் (திருக்கல்யாணம்):- வெள்ளி ரதம்
7ம் நாள் (தைப்பூசம்):- தைப்பூசம் திருத்தேரோட்டம்
8ம் நாள்:- தங்கக்குதிரை வாகனம்
9ம் நாள்:- பெரிய தங்கமயில் வாகனம்
10ம் நாள் (கொடியிறக்கம்):- தெப்பத்தேர்.
ஆரம்ப காலங்களில் தைப்பூசம் 10 நாள் விழா பழநி முருகன் கோயிலில் நடைபெறவில்லை. தைப்பூச விழாக்கள் எல்லாம் பழநி ஊர் கோயிலான ஶ்ரீ பெரிய நாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். தைப்பூச விழாவில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து ஶ்ரீமுத்துக்குமார சுவாமி எழுந்தருளி 10 நாள் உலா வருவார். முருகப்பெருமான் திருக்கல்யாணம் கூட பழநிக்குப் பதிலாக பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் யாரும் ஆதிகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலுக்குச் செல்வது கிடையாது.
பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, பால் காவடி, தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்தும் மண்ணியிட்டு படியேறி சுவாமியை தரிசனம் செய்ய வருவர். பாத யாத்திரையாக வருபவர்களில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரைக்குடி நகரத்தார் காவடி பெரும் சிறப்பு வாய்ந்தது.