“பாஸ்பாலா?.. அந்த வார்த்தையை முதல்ல மெக்கலம் வெறுக்கிறார்.. காரணம் இதான்” – ஸ்டோக்ஸ் வெளியிட்ட தகவல்

தற்போது உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் என்கின்ற வார்த்தை பல பேரால் உச்சரிக்கப்படும் பரபரப்பான ஒரு வார்த்தையாக மாறி இருக்கிறது.

மேலும் அந்த வார்த்தை உற்சாகம் தரக்கூடியதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மற்றும் மெக்கலம் பயிற்சியில் அதிரடியான முறையில் விளையாடி வருகிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், பொதுவாக உலக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளில் ஏதாவது ஒரு வீரர் அதிரடியாக விளையாடுவார், ஆனால் இங்கு மொத்த அணியும் விளையாடுகிறது. மேலும் பந்துவீச்சு ஃபீலிங் இரண்டுமே அதே அதிரடியான முறையில் அமைந்திருக்கிறது.

உதாரணமாக பந்தை அதிகம் வெளியில் வீசி பேட்ஸ்மேன் செட் பண்ணுகிறேன் என்று இங்கிலாந்து இப்பொழுது செய்வதில்லை. அவர்கள் நேராக பேட்ஸ்மேன் தாக்கி ரன்கள் போனாலும் பரவாயில்லை என்று பந்து வீசுகிறார்கள். அதேபோல் ஒரு ரன்னை தடுப்பதாக இருந்தாலும் கூட வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெளிப்படுத்தக்கூடிய முயற்சியை தருகிறார்கள். இதனால் தலையில் காயம்பட்டு ஜாக் லீச் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்து திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அதிரடியான முறையில் இங்கிலாந்து அணியால் விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட் முறைக்கு பாஸ்பால் என பெயரிடப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் தற்போதைய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் சக வீரர்களால் பாஸ் என அழைக்கப்படுகிறார். இதனால் அவரது பெயராலே பாஸ்பால் என இந்த முறை அழைக்கப்படுகிறது.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் மந்தமான முறையில் சலிப்பு தருகின்ற வகையில் விளையாடப்படுவது என கிரிக்கெட் ரசிகர்களால் நினைக்கப்படுவதுண்டு. பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதற்குள் இருக்கும் நுட்பங்கள் மற்றும் திட்டங்கள் தெரியாது. மேலும் t20 கிரிக்கெட் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே ஆதரவும் குறைந்து வந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *