தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள்வெட்டு… கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி… !
இவரது வீட்டை நேற்று இரவு சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்தனர். யார் என நேசப்பிரபு வெளியில் வந்து பார்த்தார். அப்போது மறைந்திருந்த மர்மக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிஓடிச் சென்றது. கதறித் துடித்த நேசபிரபுவை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இச்சம்பவம் நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நேசபிரபு போலீஸில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த ஆடியோவில், தன்னை சிலர் நோட்டமிடுவதாகவும், தான் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைப் பற்றி அந்த மர்மநபர்கள் விசாரித்து வருவதாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த நபர்கள் தன்னைச் சுற்றி வளைத்து விட்டதாகவும், தனது வாழ்க்கையே முடிந்து விட்டதாகவும் நேசபிரபு கூறி கதறி அழுவது அந்த ஆடியோவில் உள்ளது. 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் மெத்தனத்துடன் செயல்பட்டதால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக பத்திரிக்கையாளர் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.