முஸ்லீம் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவா அமைப்பினர்.. 15 கட்டிடங்களை இடித்து அட்டூழியம்..!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலம், பேரணி நடத்தினர். அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இருவேறு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது.
21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நயா நகர் பகுதியில் உள்ள மீரா சாலையில் இந்துத்துவா ஒரு இரவு பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இரவு 11 மணியளவில் இந்துத்துவா அமைப்பினர் முஸ்லிம்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர். மேலும் அவர்கள் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ராமர் தொடர்பான கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது. அப்போது, போலீசார் அவர்களை தடுத்தபோதும், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.