இந்தியா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளையடித்த மர்மநபர்கள்
இந்தியா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணி ஒருவரிடம் மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டியுள்ளார்கள்.
விசாகப்பட்டினம் சென்றிருந்த சுற்றுலாப்பயணி
சுவிஸ் சுற்றுலாப்பயணி ஒருவர் ஆந்திரா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரிடம் கொள்ளையடித்துள்ளார்கள்.
நேற்று, Noah Ellis என்னும் அந்த 24 வயது சுற்றுலாப்பயணி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலுள்ள யாரதா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, மூன்று பேர் அவரை வழிமறித்துள்ளார்கள்.
Noah Ellisஐ வயிற்றில் குத்திய அவர்கள், அவரது கையிலிருந்த மொபைல் போனைப் பறித்துச் சென்றுள்ளார்கள். இதுகுறித்து பொலிசாரிடம் அவர் புகாரளித்துள்ள நிலையில், பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.