தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பரிதாபமாக மரணம்.., மண்ணில் புதைந்த நூற்றுக்கணக்கானோர்
தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 70 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து
மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கமானது திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மீட்பு படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 19 -ம் திகதி நடந்த இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை.
70 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், தங்க சுரங்க விபத்து குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், விபத்தில் 70 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியதாகவும், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை என்று கூறப்படுகிறது.