சார்லஸ் மன்னராக இருக்க வேண்டாம் என விரும்புபவர்களுடன் ஹரி: பிரபல ஜோதிடரின் கணிப்பு பலிக்குமா?

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தங்களுக்கு மன்னராக இருக்கவேண்டாம் என விரும்புபவர்களுடன் இளவரசர் ஹரியும் மேகனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட விடயத்தால் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
சர்ச்சையின் மறுபெயர் ஹரி மேகன்?
மேகன் ராஜ அரண்மனைக்குள் காலடி எடுத்துவைத்த நாள் முதற்கொண்டே, பிரித்தானிய ராஜ குடும்பத்தில் சர்ச்சைதான் எனலாம். உதவியாளர்களுடன் சண்டை, இளவரசர் வில்லியம் கேட் தம்பதியுடன் சண்டை, என்று தொடங்கி கடைசியில் ராஜ குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார்கள் ஹரி மேகன் தம்பதியர்.
அப்படியும் அவர்கள் அமைதியாக இருப்பதுபோல் தெரியவில்லை. ராஜ குடும்பத்துக்கு ஏதாவது தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
மன்னரை பதவிநீக்கம் செய்ய விரும்புபவர்களுடன் ஹரி
இப்போது ஹரி மேகனால் மீண்டும் ஒரு தலைவலி உருவாகியிருக்கிறது. ஆம், சார்லஸ் தங்களுக்கு மன்னராக இருக்கவேண்டாம் என விரும்புபவர்களுடன் இளவரசர் ஹரியும் மேகனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட விடயம் பிரித்தானியாவில் புது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
சார்லஸ் மன்னராக இருக்கும் 14 நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, தஙக்ளுக்கு சார்லஸ் மன்னராக வேண்டாம் என்றும், தாங்கள் குடியரசாக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
2022இல் இளவரசர் வில்லியமும் கேட்டும் ஜமைக்காவுக்குச் சென்றிருந்தபோது, மன்னராட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் கூடியிருந்த விடயத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, ஜமைக்கா பிரதமரான Andrew Holness, தங்கள் நாடு குடியரசாக தயாராக இருப்பதாகக் கூறி தர்மசங்கடமான ஒரு சூழலை உருவாக்கினார்.