கல்யாண வீட்டு ஸ்பெஷல் சேனை மசியல் : சுவையான ரெசிபி

தேவையான பொருட்கள்

அரை கிலோ சேனை

4 பச்சை மிளகாய்

கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

கொஞ்சம் புளி தண்ணீர்

தண்ணீர்

தேங்காய் கால் மூடி

பச்சை மிளகாய் 3

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

1 ஸ்பூன் கடுகு

வரை மிளகாய் 3

1 கொத்து கருவேப்பிலை

உப்பு

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை: சேனையை கழுவி தோல் நீக்கி நறுக்கவும். இதை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதில் மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் நறுக்கியது, புளி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 4 விசில் விட்டு வேக வைக்கவும். தொடர்ந்து சேனையை மசித்துகொள்ளவும். ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், தேங்காய் அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , கடுகு, வத்தல் சேர்த்து வதக்கவும், கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும். இதில் மசித்த சேனையை சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து தேங்காய் பேஸ்டை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கொள்ளுங்கள். கடைசியாக எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளுன்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *