குழந்தைகள் விரும்பி உண்ணும் ‘முட்டை சீஸ் ரோல்’ ரெசிபி.!

காலை பொழுதுகளில் வேலைக்கு அவசர அவசரமாக செல்பவர்கள் காலை உணவிற்கு ஈஸியாக என்ன செய்யலாம் என்று குழப்புவார்கள். அப்படிப் பட்டவர்களுக்காக தான் இந்த ரெசிபி. ஆம் இந்த ரெசிபியை வெறும் 10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம்…

குழந்தைகளுக்கு காலை உணவாக அவர்களுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியமாகவும், சுவை நிறைந்ததாகவும் செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த ‘முட்டை சீஸ் ரோல்’ தான் சரியான தேர்வு.

முட்டை, சீஸ் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு ‘முட்டை சீஸ் ரோல்’ செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 1

உப்பு – ருசிக்கேற்ப

சிவப்பு மிளகாய் தூள் – ருசிக்கேற்ப

பிராட் துண்டு – 1

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

சாண்ட்விச் சீஸ் – 1

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து கொள்ளவும்.

பின்னர் முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பிரெட் ஸ்லைஸை எடுத்து அதன் நான்கு பக்கங்களையும் வெட்டி எடுத்துவிடுங்கள்.

பிறகு பிரெட் ஸ்லைஸை 3 சம பாகங்களாக வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய ப்ரெட் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீஸில் போர்த்தி வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து வெண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் முட்டை கலவையை ஊற்றவும்.

பிறகு முட்டைகளை மெதுவாக கல்லில் பரப்பி அதன் மேல் சீஸ் போர்த்திய ரொட்டியை வைத்து முட்டையை கொண்டு சுற்றி நன்றாக சமைக்கவும்.

முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து குழந்தைகளுக்கு சூடாக பரிமாறுங்கள்…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *