“நான் இறக்கும் வரை இஸ்லாமியர் தான் பிரதர்”.. நெட்டிசன் போட்ட சர்ச்சை பதிவு – பதிலடி கொடுத்த குஷ்பூ சுந்தர்!
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த குஷ்பூ சுந்தர், அவ்னி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வெளியிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிப்புலகில் மிகப்பெரிய புகழை கொண்டு நடிகை குஷ்பு கடந்த 2010 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
அப்போது திமுகவின் தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடைய முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன் பிறகு சுமார் 4 ஆண்டுகள் கழித்து, திமுகவிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, இந்திய தேசிய காங்கிரஸில் நவம்பர் 26 2014 அன்று இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பாக குஷ்பு அவர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ அவர்கள் இப்பொழுது பாஜகவில் தேசிய நிர்வாக குழுவில் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகின்றார். அண்மையில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு குறித்து பேசிய நடிகை குஷ்பு, தன்னால் ராமர் கோவில் திறப்பிற்கு செல்ல முடியவில்லை என்றாலும் கூட அவருக்காக ஒரு பாடலை பாடுகிறேன் என்று கூறி ராமர் பெயரால் ஒரு பக்தி பாடலை பாடி இருந்தார்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு குஷ்பூ வெளியிட்டிருந்த ஒரு ட்விட்டை மேற்கோள்காட்டி நெடிசன் ஒருவர் அவரை சர்ச்சையாக விமர்சித்த நிலையில், நான் இப்பொழுதும் இஸ்லாமியர் தான், இறக்கும் தருவாயிலும் அப்படித் தான் இருப்பேன். உங்களைப் போன்ற சில ஆட்கள் தான் மதத்தை கொண்டு பிரிவினைகளை பற்றி யோசிக்கிறார்கள். உங்களுடைய எண்ணங்களை விசாலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று காட்டமாக அவர் கூறியுள்ளார்.