எலெக்ட்ரிக் கார் வாங்கணுமா? ஈசியாக வங்கிக்கடன் பெறுவது வாங்கலாம்! முழு விவரம் இதோ!
எலக்ட்ரிக் கார்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. பல வங்கிகள் மின்சார கார்களுக்கு பிரத்யேக கடன் உதவிகளை வழங்குகின்றன. மின்சார வாகனக் கடனுக்கான தவணைக்காலம் மிகவும் நெகிழ்வானது. கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, 12 முதல் 96 மாதங்கள் வரை தவணைக்காலத்தைத் தேர்வு செய்யலாம்.
ஸ்டேட் வங்கி எலெக்ட்ரிக் வாகன கடன்
எஸ்பிஐ வங்கி சாதாரண கார் கடனுக்கு வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.25 சதவீதம் சலுகை வழங்குகிறது. குறிப்பாக, 31 ஜனவரி 2024 வரை செயலாக்கக் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார்களுக்கு எஸ்பிஐ கிரீன் கார் லோன் மூலம் கடன் பெற்றால் 8.75% முதல் 9.45% வரை வட்டி சலுகைகள் பெறலாம். அதுவும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைவான வட்டிவிகிதத்தில் கடன் வழங்குகிறது. சில மாடல் கார்களுக்கு விலையில் 100% கடன் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ‘கிரீன் மைல்ஸ்’ திட்டத்தின் கீழ் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து வட்டிவிகிதம் 9.15% முதல் 12.25% வட்டியுடன் கடன் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பிஎன்பி வங்கியின் கிரீன் கார் கடன் திட்டம் மூலம் எலெக்ட்ரிக் கார் வாங்கினால் ஆன்-ரோடு விலையில் 10% தொகையை வழங்குகிறது. அல்லது எக்ஸ்-ஷோரூம் விலையில் 0% வழங்குகிறது. அதாவது எக்ஸ்-ஷோரூம் விலைக்கு முழுமையாக நிதி அளிக்கிறது. செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணம் எதுவும் இல்லை.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா எலக்ட்ரிக் கிரீன் கார் திட்டத்தில் செயலாக்க கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணம் இல்லாமல் கடன் வழங்கும். வட்டி விகிதம் CIBIL ஸ்கோரைப் பொறுத்து 8.8% முதல் 13% வரை இருக்கும். மேலும் மஹா சூப்பர் கார் கடன் திட்டத்திலிருந்து 0.25% சலுகையையும் வழங்குகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியில் எலெக்ட்ரிக் கார் கடன் பெற சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. 21 முதல் 60 வயது வரையான ஊதியம் பெறும் நபர்கள், 21 முதல் 65 வயது வரை உள்ள தொழில்முனைவோர், கூட்டாண்மை நிறுவனங்கள், பப்ளிக் மற்றும் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள், HUF மற்றும் அறக்கட்டளைகள் கடன் பெற முடியும்.
எலெக்ட்ரிக் கார் வாங்கத் தேவையான ஆவணங்கள்
அடையாளம் மற்றும் முகவரி சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் தேவை. விண்ணப்பதாரரின் சுயவிவரத்தின் அடிப்படையில், சம்பளம் அல்லது வருமான ஆவணங்கள் போன்ற பிற ஆவணங்களும் எலெக்ட்ரிக் கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.