இவ்வாண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது – முழு லிஸ்ட்!

ஆண்டு தோறும் இந்த பத்ம விருதுகள் இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வழங்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் இந்த மாபெரும் விழா நடைபெறும். இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான, 132 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழர்கள் வென்றுள்ள பத்ம விருதுகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

பத்ம விபூஷண் வென்ற தமிழர்கள்

வைஜெயந்திமாலா பாலி – கலைத்துறை
பத்மா சுப்ரமண்யம் – கலைத்துறை

பத்ம பூஷன் விருது

மறைந்த நடிகர் விஜயகாந்த் – கலைத்துறை

பத்மஸ்ரீ விருதுகள்

பத்திரப்பன் – கலைத்துறை

ஜோஷ்னா சின்னப்பா – விளையாட்டு

ஜோ டி குரூஸ் – இலக்கியம் மற்றும் கல்வி

ஜி நாச்சியார் – மருத்துவம்

சேசம்பட்டி டி சிவலிங்கம் – கலைத்துறை

இந்த பத்ம விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் மற்றும் இந்த பட்டியலில் பிற நாடுகளை 8 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்பட காலம்சென்ற 9 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *