இது தெரியுமா ? இந்தியாவின் வினோத சட்டங்கள்!

ரூ.10க்கு மேல் தரையில் இருந்து எடுத்தால் அரசையே சேரும்!

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தின்படி, தரையில் இருந்து எடுக்கும் பணம் 10 ரூபாய்க்கு மேல் இருந்தால், அது இங்கிலாந்து அரசையே சேரும் என்றிருந்தது. இன்றும் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தினால், 10 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அது உங்களையே சேரும்; அல்லது அதை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். இதனாலேயே, இந்தியாவில் புதையல் தேடுபவர்கள் மிக அரிது..

குழந்தை திருமணம்

இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. புரியவில்லையா?அதாவது, குழந்தை திருமணம் செய்வது தவறு. ஆனால் திருமணம் செய்துவைக்கப்பட்ட குழந்தைகளை பிரிக்க, நேரடியாக சட்டத்தில் இடமில்லை. தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று திருமணம் செய்து வைக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவர் தாமாக முன் வந்து புகார் அளித்தால் மட்டுமே அந்த திருமணம் ரத்து செய்யப்படும்.

குழந்தை இல்லையென்றால் மற்றொரு திருமணம்…

கோவா மாநிலத்தை பொறுத்தவரை, ஒரு ஆண் தனது மனைவியின் மூலம் குழந்தை பெற முடியாத நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லும். 25 வயதுக்குள் ஒரு குழந்தை, அல்லது 30 வயதுக்குள் ஒரு ஆண் குழந்தையை தனது மனைவி ஈன்றெடுக்கவில்லை என்றால், மற்றொரு திருமணத்தை ஒரு ஆண் செய்துகொள்ள கோவா சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் கோவா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே செல்லும். இதே கோவாவில், திருமணம் முறியும்போது, ஒரு மனைவிக்கு அவரது கணவனின் சொத்துக்களில் சரி பாதி வழங்க வேண்டும் என்ற சட்டமும் உண்டு.

விபச்சாரத்தின் மேல் சட்டப்படி தடை இல்லை

பொதுவாகவே விபச்சாரத்தை சட்டவிரோதம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருந்தாலும், சட்டப்படி அதன் மீது எந்த தடையும் கிடையாது. ஆனால், ப்ரோக்கர் போல மூன்றாவது ஒரு நபர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட பெண்களுக்கு உதவுவது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தை இருப்பவர்கள் தத்தெடுக்க முடியாது…

ஒரு வீட்டில் ஆண் குழந்தையை வைத்திருப்பவர்கள், மற்றொரு ஆண் குழந்தையை தத்தெடுக்க முடியாது. சட்டப்படி, மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ ஒரு வீட்டில் இருக்கும் போது, மற்றொரு ஆண் குழந்தையை தத்தெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதே சட்டம் பெண் குழந்தைகளுக்கும் செல்லும். மேலும் குழந்தைகளை தத்தெடுப்பவர்கள், அந்த குழந்தையை விட 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.

அரசு நினைத்தால் உங்கள் நிலத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்

பொது நலத்திற்காக, நம் நிலங்களை எடுத்துக் கொள்ள ஒரு அரசாங்கத்திற்கு அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. இதற்காக அந்த நபருக்கு அன்றைய பொருளாதார நிலவரத்தை படி, அரசு உரிய பணத்தைக் கொடுத்து வாங்கினாலும், பலமுறை மார்க்கெட் விலை கிடைக்காததும், பணம் கிடைப்பது இழுத்தடிக்கப்படுவதும் பொதுமக்களை கஷ்டப்படுத்தி விடுகிறது.

இரவு நேரத்தில் தொழிற்சாலைகளில் பெண்கள் கூடாது

பெண்கள் பாதுகாப்புக்காக, சுதந்திரத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்ட சட்டங்களில் இது முக்கியமானதும். இரவு நேரங்களில், தொழிற்சாலைகளில் பெண்கள்ளை வேலை செய்ய வைப்பது சட்டப்படி குற்றமாகும். பி.பி.ஓ, ஐடி போன்ற இப்போதைய நவீன தொழில்நுட்ப வேலைகளுக்கு இது செல்லாது என்றாலும், பல தொழிற்சாலைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட, இன்றும் இந்த சட்டம் ஒரு காரணமாக இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *