ஆண்களே! படுக்கையில் சிறப்பா செயல்பட முடியலையா? இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிங்க..
Turmeric For Erectile Dysfunction In Tamil: தற்போது நிறைய ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பாலியல் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு.
இந்த பிரச்சனையால் பல ஆண்கள் தங்களின் துணையை திருப்திப்படுத்த முடியாமல் மனதளவில் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஏன், பல ஆண்கள் இந்த ஒரு காரணத்தினாலேயே மன அழுத்தத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.
அதோடு இந்த பிரச்சனையைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும் தயக்கம் கொள்கிறார்கள். ஆனால் இந்த விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு நமது வீட்டு சமையலறையில் உள்ள ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அது தான் மஞ்சள் தூள். இந்த மஞ்சள் தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு பொதுவான பொருள். இது உணவிற்கு நல்ல ப்ளேவரை மற்றும் நிறத்தைக் கொடுப்பதைத் தவிர, உடலில் பல மாயங்களைப் புரியக்கூடியவை.
ஆயுர்வேதத்தில் கூட மஞ்சள் பல முக்கியமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த மஞ்சள் தூள் இரத்த சர்க்கரை அளவை சீராக்குவது, இதய நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட கொடிய நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவி புரிகிறது. அதோடு இந்த மஞ்சள் அழகு பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆய்வுகளில் கூட மஞ்சள் விறைப்புத்தன்மை கோளாறை சரிசெய்து விறைப்புத்தன்மையை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.
மஞ்சள் விறைப்புத்தன்மை கோளாறை சரிசெய்ய உதவுமா?
ஆய்வுகளின் படி, மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. விலங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மஞ்சளில் உள்ள நுண்பொருட்கள் எலிகளின் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றிலும் சிகிச்சை அளிக்க முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இந்த மஞ்சள் மனிதர்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை கோளாறை சரிசெய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும் இதற்கு அதிக தரவுகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் அளிக்கும் நன்மைகள்
மஞ்சள் விலைக் குறைவில் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும், இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக ஆண்களின் ஆணுறுப்பில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரிசெய்து, செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக, மஞ்சள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு சிறிய ஆய்வில், 39 ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தினமும் 2,000 மிகி மஞ்சளானது, சுமார் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் மஞ்சளை உட்கொண்டவர்களின் தமனி எண்டோடெலியல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் பெரிய அளவில் குறைவு ஏற்பட்டது தெரிய வந்தது.