நமது நாட்டில் அனைத்து குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சட்டங்கள்..!
6 மணிக்கு மேல் பெண்களை கைது செய்ய முடியாது!
இந்தியாவில் பெண்களை பெண் போலீசார் தான் கைது செய்ய வேண்டும் என்று சட்டம் உண்டு. அதே நேரம், மாலை 6 மணிக்கு மேல் ஒரு பெண்ணை கைது செய்ய முயற்சி செய்தால், அதை மறுப்பதற்கு அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.
பாலியல் புகார்களை எந்த காவல் நிலையத்திலும் அளிக்கலாம்!
பாலியல் வன்கொடுமை விவகாரங்களில், பாதிக்கப்பட்ட பெண்கள், எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். காவல் நிலைய வரம்பு கோரி, அந்த புகாரை காவல்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது. அதை ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ என்ற பெயரில் பதிவு செய்து, உரித்த காவல் நிலையத்திற்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறை அதிகாரிகளையேச் சேரும்.
பொது இடத்தில் காதல் ஜோடிகள்!
பொது இடத்தில் காதல் ஜோடிகள் கட்டிப்பிடிப்பது நம் நாட்டில் கண்டிக்கத்தக்க ஒரு விஷயமகவே உள்ளது. இதற்காக, பல மாநிலங்களில் காதலர்களையும், நண்பர்களையும் காவல்துறையினர் சீண்டுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால், உண்மையிலேயே இதன் மீது அரசியல் சாசனப்படி எந்த தடையும் கிடையாது. பொது இடத்தில் ஒரு ஜோடி ஆபாசமாக நடந்து கொள்வது மட்டுமே சட்டப்படி குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதையுமே ஆபாசமாக பலர் பார்ப்பதால், இந்த சட்டம் இன்றும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மது அருந்தும் வயது!
சிறுவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் வந்துவிடக்கூடாது, என்பதற்காக மதுவை இளையோருக்கு மதுவை தடை செய்ய சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாநிலமும் இதில் மாறுபடுவதால், தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு, தமிழகத்தில் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் மது அருந்தக்கூடாது. அதேநேரம், கோவாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்த கூடாது, என்றும் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில், 25 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிளுக்கும், சைக்கிள் ரிக்சாக்களுக்கும் சாலை விதிகள் கிடையாது!
சாலை விதிகள் உருவாக்கப்பட்ட போது, மோட்டார் வாகனங்களுக்கு மட்டுமே அவை விதிக்கப்பட்டதால், சைக்கிள் ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு டிராபிக் சிக்னலை பின்பற்ற சட்டப்படி அவசியம் கிடையாது. ஆனால் நம் பாதுகாப்புக்காக விதிகளை பின்பற்றுவது அனைவருக்கும் நல்லது…