பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியது பா.ஜ.க..!
2024 மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பாரதிய ஜனதா கட்சி நேற்று தொடங்கியுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சாதனைகளை விளக்கும் விதமாக பிரசார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அயோத்தி ராமர் கோவில், சந்திரயான் 3 விண்கலம் உள்ளிட்ட மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் பல்வேறு சாதனைகளாக பல்வேறு அம்சங்கள் பிரசார வீடியோவில் இடம்பெற்றுள்ளது.