ஏர்டெல் தாண்டவம்.. மாதம் ரூ.150 போதும்.. 1 வருடம் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்!
ஜியோ (Jio) நிறுவனத்தையே கதிகலங்க செய்யும் விதமாக மாதத்துக்கு வெறும் ரூ.150 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் உள்பட பல்வேறு சலுகைகள் கொண்ட திட்டத்தை ஏர்டெல் (Airtel) நிறுவனம் வழங்குகிறது.
விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 455 திட்ட விவரங்கள் (Airtel Rs 455 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.
இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump-Sum Data) சலுகையாகும். ஆகவே, இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். அதே போல இந்த 6 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், அதற்கு பின் எந்தவொரு டேட்டா சலுகையும் ஏர்டெல் வாடிக்கையாளக்களுக்கு கிடைக்காது.
இருப்பினும், வாய்ஸ் கால் சலுகைகளை தொடர்ந்து பெற்று கொள்ள முடியும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். அதே போல 900 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சப்ஸ்கிரிப்ஷனை பெற்று கொள்ளலாம். அதோடு ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த தொகையை மாதத்துக்கு கணக்கிட்டால், ரூ 151 மட்டுமே தேவைப்படுகிறது. கம்மியான விலையில் வாய்ஸ் கால் திட்டம் வேண்டுமானால், ஏர்டெல்லில் இதுவே சிறந்த திட்டமாகும். இதேபோல கம்மி விலையில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வேண்டுமானால், ரூ 1799 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
ஏர்டெல் ரூ 1799 திட்ட விவரங்கள் (Airtel Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமும் மிகவும் மலிவான விலைக்கு லாபகரமான சலுகைகளையே வழங்கப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களில் அதிகப்படியான டேட்டா தேவையில்லை, ஆண்டு முழுவதும் வாய்ஸ் கால்கள் சலுகை இருந்தால் மட்டுமே போதும், என்று கேட்கும் நபர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் சரியான தேர்வாக இருக்கும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும், வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுவும் லம்ப்-சம் டேட்டா சலுகை என்பதால், ஆண்டு முழுவதும் இந்த டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். அதே போல இந்த திட்டத்தில் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் இந்த திட்டத்திலும் வழங்கப்படுகிறது. அதே போல 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. மேலும், ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆப்களை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ 149 மட்டுமே தேவைப்படுகிறது. வாய்ஸ் கால் சலுகை மட்டுமே போதும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் எப்படி பார்த்தாலும் லாபத்தையே தருகின்றன.