AnimalOnNetflix: நெட்பிளிக்ஸில் வெளியான அனிமல்… சைடு வாங்கிய சலார்… ஓடிடி ரசிகர்கள் வெறித்தனம்!
இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்தில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் திரையரங்குகளை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியான அனிமல் படத்தை ஓடிடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
ஓடிடியில் வெளியான அனிமல்; ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸுக்கு முன்பே அனிமல் படத்துக்கு செம்ம ஹைப் இருந்தது. அனிமல் டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களை மிரட்டியிருந்தன. இதனால் திரையரங்குகளில் வெளியான அனிமல் படத்துக்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்தது.
ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் வரிசையில் ரன்பீர் கபூரின் அனிமல் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. அப்பா அனில் கபூரின் மீது அதீத அன்பு கொண்ட ரன்பீர் கபூர், சைக்கோத்தனமாக மாறுவதே அனிமல் படத்தின் கதை. இதனால் படம் முழுவதும் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இருந்தன. இது அனிமல் படத்துக்கு நெகட்டிவாகும் என எதிர்பார்த்தால், அதனை கடந்து பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதேநேரம் அனிமல் மீது சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தன. பிரபல பாலிவுட் பாடலாசிரியரும் மூத்த திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கூட அனிமல் திரைப்படம் குறித்து காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். அதேபோல், ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளும் சர்ச்சையாகின. இந்நிலையில் அனிமல் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது ஓடிடியில் வெளியான அனிமல் திரைப்படத்தை நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து வருகின்றனர். திரையரங்குகளில் அனிமல் படம் பார்க்காதவர்கள் மட்டுமின்றி, ரிப்பீட் ஆடியன்ஸ்களும் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
கடந்த வாரம் பிரபாஸின் சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூரின் அனிமல் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது சலாரை விட அனிமல் படத்துக்கு தான் நெட்பிளிக்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இதனையடுத்து அனிமல் நெட்பிளிக்ஸில் வெளியானதை ரசிகர்கள் டிவிட்டரிலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.