பைக் மாதிரி மைலேஜ் தரும் ஹூண்டாய் காரை வாங்க அலைமோதும் கூட்டம்! விலை இவ்ளோதானா! தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது 5 சீட்டர் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியிட்டு வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்திருக்கின்றன.
இதன்படி பார்த்தால் ஆரம்ப நிலை EX மற்றும் EX(O) வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 36-38 வாரங்களாக உள்ளது. அதாவது முன்பதிவு செய்த நாளில் இருந்து, நீங்கள் 36-38 வாரங்கள் வரை காத்திருந்தால் மட்டுமே உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும். இருப்பதிலேயே இந்த வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம்தான் மிகவும் அதிகம் ஆகும்.
இவற்றை தவிர மற்ற அனைத்து பெட்ரோல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் தற்போதைய நிலையில் 18 வாரங்களாக இருக்கிறது. மறுபக்கம் அனைத்து சிஎன்ஜி வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 14 வாரங்களாக இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால்தான், காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் மொபைல் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்பட பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 81 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மறுபக்கம் இதன் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 68 பிஹெச்பி மற்றும் 96 என்எம் ஆகவும் மட்டுமே இருக்கும். பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜையும் மட்டும்தான் வழங்கும். தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாய் ஆகவும் மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.