வந்தே பாரத் ரயில் குறித்த இந்த ரகசியம் எல்லாம் யாருக்குமே தெரியாது! இதுல இவ்வளவு வசதி இருக்குதா?

வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் வரிசையாக பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் ரயிலை விட வந்தே பாரத் ரயில் வேகமாக பயணிப்பதால் மக்கள் இந்த ரயிலில் பயணிக்க அதிக ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த ரயிலில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. பலருக்கும் இந்த ரயிலில் உள்ள சில முக்கியமான விஷயங்கள் குறித்த தகவல் தெரிவதில்லை.

இப்படியாக வந்தே பாரத் ரயிலில் உள்ள பலரும் அறியாத சில முக்கியமான தகவல்களை தான் இங்கே நாம் காண போகிறோம். அடிக்கடி வந்தே பாரத் ரயில் பயணித்த பயணிகளுக்கு கூட இதில் ஒரு சில தகவல்கள் தெரியாமல் இருக்கலாம். இனி நீங்கள் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் தருணம் அமைந்தால் இதையெல்லாம் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வியப்பானதாக இருக்கும்.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலில் உள்ள கழிவறைகள் பயோ வேக்கம் டாய்லெட்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக விமானங்களில் தான் இது போன்ற பயோ வேக்கம் டாய்லெட்டுகள் அமைக்கப்படும். ஆனால் வந்தே பாரத் ரயில் இந்தியாவின் மிக முக்கியமான ரயில் என்பதால் இதிலும் பயோ வேக்கம் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த ரயில் முழுவதும் வைபையில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் எந்த சீட்டில் அமர்ந்து கொண்டு வேண்டுமானாலும் இலவச வைபையை பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக அனைவருக்கும் தெரிந்த தகவலான இந்த ரயில் முழுவதும் ஆட்டோமேட்டிக் கதவுகள் கொண்டு உருவாக்கப்பட்ட ரயிலாக இருக்கிறது. ரயில் கிளம்பும் முன்பு கதவுகள் தானாக அடைக்கப்படும்.

இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒரு ரயிலுக்கு ரூபாய் 100 கோடி வரை செலவு செய்கிறது. இவ்வளவு அதிகமாக செலவு செய்யப்பட்டு இந்த ரயில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த நிலையில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சதாப்தி ரயிலை விட அதிக வேகத்தில் செல்லும் ரயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயிலாக இந்த வந்தே பாரத் ரயிலில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்டிகள் கொண்ட ரயில்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு விதமான சீட்டிங் ஆப்ஷன்கள் உள்ளன. சாதாரண ஏசிசேர் கார் மற்றும் எக்ஸிகியூடிவ் சேர் கார் என இரண்டு விதமான சிட்டிங் ஆப்ஷன்கள் உள்ளன. இதே ரயிலில் எட்டு பெட்டிகள் கொண்ட சிறிய ரக வந்தே பாரத் ரயிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் எக்ஸிக்யூடிவ் சேர் பெட்டியில் உள்ள சீட்டுகள் 180 டிகிரி வரை திரும்பிக் கொள்ளும் வசதி கொண்டதாக உள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் உணவு என்பது ரயில்வே சார்பிலேயே வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணமும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனால் பயணிகள் இந்த ரயிலுக்கான டிக்கெட்டை தேர்வு செய்யும் போது சைவ உணவு வேண்டுமா? அசைவ உணவு வேண்டுமா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

வந்தே பாரத் ரயிலில் ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட பயணிகள் தகவல் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளுக்கு தற்போது ரயில் எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது அடுத்து எந்த ஸ்டேஷனில் நிற்கும் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவல்கள் எல்லாம் தெரிவிக்கப்படும். இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் ரயிலுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் வந்து இந்த ரயிலில் ஏறும் வகையில் இந்த ரயிலில் வசதி செய்யப்பட்டுள்ளன.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *