Karthigai Deepam Serial: தீபா தான் பல்லவி என அறிந்த கார்த்திக்.. அடுத்து எடுத்த முடிவு என்ன?
Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக பாடுவதற்காக ஆசிரமத்துக்கு வந்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்தியும் இளையராஜாவும் பல்லவி யார் என்பதை பார்ப்பதற்காக ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருக்க வழி மறிக்கும் ரவுடிகள் அவர்களை தாக்க இருவரும் மயங்கி விடுகின்றனர்.பிறகு ரவுடிகள் ரூபாஸ்ரீக்கு தகவல் கொடுக்க அவள் பணத்தையும் போட்டு விடுகிறாள்.
ஆசிரமத்தில் தீபா படுவதற்காக தயாராக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கார்த்திக் கண் திறந்து ஆசிரமத்துக்கு கிளம்பி வருகிறான், கொட்டும் மழையில் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது திடீர்ன்னு ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க குடையை எடுத்து கொண்டு கார்த்திக் நடந்தே வருகிறான்.
ஆசிரமத்தில் தீபா பாட்டு பாடி கொண்டிருக்க கார்த்திக்கும் அங்கு வந்து விட குரலை கேட்டு பல்லவி தான் என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே வந்து பார்க்க பாடுவது தீபா என தெரிந்து அதிர்கிறான். நாம ரசித்த குரலுக்கு சொந்தக்காரி தனது மனைவி தான் என்பது அறிந்து சந்தோஷப்படுகிறான்.
பாடி முடித்து தீபா வீட்டிற்கு கிளம்ப கார்த்திக் தீபா நாம உங்கே வந்த விஷயம் தெரிய கூடாது என மறைந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.