Body Double: `யாத்திரையில் வருவது ராகுல் இல்லையா?’ – பாஜக குற்றச்சாட்டும் காங்கிரஸ் எதிர்வினையும்!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடர்ந்து, தற்போது, மணிப்பூர் மாநிலத்திலிருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை அண்மையில் தொடங்கினார்.
அவரின் யாத்திரை பா.ஜ.க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைந்ததிலிருந்து, பேரணி பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
ராகுல் காந்தி – அவரைப் போன்ற தோற்றம் கொண்டவர்
மேலும், காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பா.ஜ.க தொண்டர்கள் கிழித்ததாகவும், வாகனங்களைச் சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காவல்துறைக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மத்தியில் நடந்த சண்டையைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,”ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னைப் போலவே இருக்கும் ஒரு டூப்பை பயன்படுத்துகிறார். யாத்திரைக்கானப் பேருந்தின் கூபேக்குள் எட்டு பேர் தங்கும் வசதி இருக்கிறது. அதில்தான் அவர் சொகுசாக அமர்ந்திருக்கிறார். அதே சமயம் அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவர் பேருந்தின் முன் அமர்ந்து மக்களை நோக்கி கை அசைத்து வருகிறார்.