விடுமுறை நாளில் இப்படியொரு அறிவிப்பா..? ஷாக் கொடுத்த Flipkart..!
இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வருடாந்திர மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட 5% பேர் அதாவது சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலல்லாமல், நிதி மந்தநிலைக்கு மத்தியிலும் பிளிப்கார்ட் நிறுவனம் 2023 இல் பெரிய அளவிலான வேலை வெட்டுகளைத் தவிர்த்தாலும், 2024ல் இதன் தாக்கம் வெளிப்படுகிறது.
கடந்த ஆண்டு, Flipkart மூத்த நிர்வாகம் உட்பட முதல் அதிகம் வருமானம் ஈட்டும் 30 சதவீத ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது மற்றும் பணியமர்த்தல் முடக்கம் போன்ற முக்கிய நடவடிக்கையால் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் பெரிய அளவிலான பணிநீக்கம் செய்யும் நிலையிலிருந்து தப்பித்தது.பிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை, ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக நடக்கும் வருடாந்திர செயல்திறன் அடிப்படையில் இந்தப் பணிநீக்கம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.இதனால் பிளிப்கார்ட்டில் பணிநீக்கத்திற்காகத் தனிப்பட்ட முறையில் எவ்விதமான நடைமுறையும் மேற்கொள்ளப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மைந்திரா நிறுவனம் இல்லாமல் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 22000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த வருடம் மைந்திரா நிறுவனத்தில் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இந்தியாவில் கடந்த வாரம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் க்யூர்பிட் சுமார் 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. CureFit என்ற பெங்களூர் நிறுவனம் Sugar.fit, Carefit, Cultfit ஆகிய பிராண்டுகளில் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.இதைத் தொடர்ந்து இந்த வாரம் ஸ்விக்கி நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கவும், லாபகரமான நிலையை அடையவும், புதிய பணிநீக்க சுற்றை அறிவிக்க உள்ளது. இதில் தொழில்நுட்பம், கால் சென்டர் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகப் பணியில் இருக்கும் குழுக்களில் சுமார் 350-400 ஊழியர்களைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் Swiggy சுமார் 6% குறைக்க உள்ளது.