கொஞ்ச தூரம் பயணத்திற்கு இவ்வளவா..? OLA கேப் பில்லை பார்த்து பயணி அதிர்ச்சி… அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
சமீபத்தில் Ola அப்ளிகேஷன் பயன்படுத்தி கேப் புக் செய்த அனுராக் குமார் சிங் என்ற கல்லூரி மாணவரிடம் எதிர்பாராத விதமாக அதிக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்த சிங் அப்ளிகேஷனில் ஒரு மினி டாக்ஸியை தேர்வு செய்து, வரிசையாக நின்ற டாக்ஸிகளில் முதல் கேபில் ஏறி பயணம் செய்துள்ளார். புக்கிங் செய்யும் பொழுது 730 ரூபாய் என்று அப்ளிகேஷனில் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ளது. எனினும் சேர வேண்டிய இடமான மத்தியரா பகுதியை சென்றடைந்தவுடன் ஓட்டுநர் 5000 ரூபாய் தரும்படி வாக்குவாதம் செய்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையை ஓட்டுனர் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த சிங் தனது அனுபவத்தை மீடியாவில் பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்த நகரத்தையே சுற்றிப் பார்த்திருந்தால் கூட இவ்வளவு பணம் செலவாகி இருக்காது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
“OTP ஐ டைப் செய்த பிறகு எனது பெயரை அவர் அப்ளிகேஷனில் தெரிந்து கொண்டார். நாங்கள் லொகேஷனை சென்றடைந்த பிறகு அவருடைய போன் ஸ்கிரீனை என்னிடம் காட்டினார். அதில் 5194 ரூபாய் காட்டியது. நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். நான் பெங்களூரு முழுவதும் சுற்றி திரிந்து இருந்தால் கூட 5000 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்திருக்காது” என்று அந்த மாணவர் கூறினார். தான் புக்கிங் செய்த ரைட் கேன்சல் ஆகி இருந்தது தனது போனை பார்த்த பிறகு தான் சிங்கிற்கு தெரியவந்தது. ஓட்டுனர் சிங்கை அதிகாரப்பூர்வமாக காரில் அழைத்துச் செல்லவில்லை. ரைடை புக் செய்த பிறகு அதனை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் பழக்கம் சிங்கிற்கு இருந்துள்ளது. இந்த விஷயத்தில் அந்த ஸ்கிரீன்ஷாட் அவருக்கு உதவியாக இருந்துள்ளது. எனவே இது குறித்து கஸ்டமர் சேவை மையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
ஓட்டுநரிடம் பேச சிங்கிற்கு கனடா தெரியாததால் அருகில் இருந்தவர்களின் உதவி நாடியுள்ளார். அவர்கள் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக ஓட்டுனர் அப்ளிகேஷனில் காட்டியபடி இரண்டு மடங்கு அதாவது 1600 ரூபாய் கொடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். அப்ளிகேஷன் மற்றும் சோஷியல் மீடியா மூலமாக இது குறித்து புகார் அளித்தும் Ola நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது மாதிரியான பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இது குறித்து நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல கஸ்டமர்கள் புக் செய்யும் பொழுது கட்டாயமாக அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைக்க வேண்டும். ரைடு விலையில் ஓட்டுநர்கள் ஏதேனும் ஏமாற்று வேலைகள் செய்யும் பட்சத்தில் உடனடியாக தகுந்த சேவை மைய ஆதரவு குழுக்களை நாட வேண்டும்.