தொடர் மழை எதிரொலி…! தக்காளி விலை வீழ்ச்சி…! மதுரையின் நிலவரம் இதோ…!
மழை பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்து வருகின்றது.
குறிப்பாக தென் மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகின்றது. இந்த அதிக கன மழை பொழிவின் காரணமாக உணவின் அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை குறைந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு வெளி மாவட்ட மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் மழை மற்றும் அதிக பனிப்பொழிவின் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது.
30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த விலை இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேபோன்று, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய தக்காளியின் விலை சீராக இருப்பதாகவும், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரக்கூடிய தக்காளியின் விலை மட்டும் சற்று குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.