வீட்டிலேயே மிக சுவையாக மட்டன் கீமா செய்வது எப்படி.? உங்களுக்கான ரெசிபி..!
மட்டன் கொத்துக்கறி வைத்து தயாரிக்கப்படும் மட்டன் கீமாவை வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, நாண், புலாவ் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
வீட்டிலேயே எளிதாக சுவையான மட்டன் கீமா எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி – 200 கிராம்
சின்ன வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
சிவப்பு மிளகாய் தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
பிரியாணி இலை
கிராம்பு
இலவங்கப்பட்டை – சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது
புதினா இலை
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
செய்முறை :
முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடிகட்டி தனியே வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு விழுது போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து வறுக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
அனைத்தும் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அலசி வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அடுத்து சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 10 நிமிடங்கள் சமைக்கவும்.
10 நிமிடங்களுக்கு பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்க்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி மட்டன் கொத்துக்கறி மென்மையாக வேகும் வரை சமைக்கவும்.
கீமா கறி மென்மையாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வெள்ளை சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்.