உடலை பொலிவாக்கும் குளியல் பொடி.. இதை எவ்வாறு செய்வது?
உடலை பொலிவாக்கும் குளியல் பொடி.. இதை எவ்வாறு செய்வது?
முந்திய காலத்தில் உடலை சுத்தம் செய்து கொள்ள மஞ்சள், பச்சை பயறு போன்ற இயற்கை பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது கெமிக்கல் சோப், க்ரீம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றோம்.
இதனால் தோல் சுருக்கம், தோல் வியாதி தான் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் குளியல் பொடி தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.
குளியல் பொடி தயார் செய்யத் தேவைப்படும் பொருட்கள்…
*பச்சை பயறு
*கஸ்தூரி மஞ்சள்
*ரோஜா இதழ்கள்
*ஆவாரம் பூ
*வெட்டி வேர்
*கடலை பருப்பு
*வேப்பிலை
குளியல் பொடி தயாரிக்கும் முறை…
ஒரு மாதத்திற்கு தேவையான குளியல் பொடி தயாரிக்க பயன்படுத்தக் கூடிய பொருட்கள் எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1/2 கிலோ பச்சை பயறு, 200 கிராம் கஸ்தூரி மஞ்சள், 200 கிராம் ரோஜா இதழ், 200 கிராம் ஆவாரம் பூ, ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர், 100 கிராம் கடலை பருப்பு, ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை…
முதலில் பன்னீர் ரோஜா பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஆவாரம் பூ மற்றும் வேப்பிலையை இவ்வாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள இதர பொருட்களையும் இவ்வாறு ஒருநாள் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்வதினால் குளியல் பொடியில் வண்டு பிடிக்காது.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒவ்வொரு பொருட்களையும் தனித் தனியாக அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
பின்னர் பொடி செய்த அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து பயன்படுத்துங்கள்.