மோட்டோ போன்களுக்கு ஆன்ட்ராய்டு 14 அப்டேட் ரெடி – பட்டியல் இதோ!
மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்துவருகிறது. தற்போது லெனோவோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் மோட்டோரோலா பயனர்களுக்கு ஏற்ற வகையில் பல பட்ஜெட் போன் தொகுப்புகளைக் கொண்டுள்ளன. மோட்டோ போன்களின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், இதில் தேவையில்லாத ப்ளோட்வேர்கள் எனப்படும் விளம்பர செயலிகள் இடம்பெறாது. கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MyUX ஸ்கின் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு பெரும் பிரச்னையை நிறுவனம் சந்தித்து வந்தது. அது தான் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்டேட் வழங்காதது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைக்கும் போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலில் அக்டோபர் 2023-இல் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் தான் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து சாம்சங், நத்திங் போன்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மோட்டோ போன்களும் புதிய இயங்குதள அப்டேட்டைப் பெறுகிறது. எனினும் சரியாத தேதியை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், படிப்படியாக ஸ்மார்ட்போன்கள் அட்டேட்டைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களான எட்ஜ் 30 அல்ட்ரா, எட்ஜ் 30 மற்றும் மோட்டோ ஜி54, மோட்டோ ஜி73 போன்றவை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைக் காணலாம்:
ரேசர் (Razr) போன்கள்:
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா – Motorola Razr 40 Ultra
மோட்டோரோலா ரேசர் 40 – Motorola Razr 40
மோட்டோரோலா ரேசர் பிளஸ் 2023 – Motorola Razr+ 2023
Motorola Razr 2023 – மோட்டோரோலா ரேசர் 2023
Motorola Razr 2022 – மோட்டோரோலா ரேசர் 2022
ஜி சீரிஸ் போன்கள்:
மோட்டோ ஜி 5ஜி 2023 – Moto G 5G 2023
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி 2023 – Moto G Stylus 5G 2023
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2023 – Moto G Stylus 2023
மோட்டோ ஜி பவர் 5ஜி 2023 – Moto G Power 5G 2023
மோட்டோ ஜி84 5ஜி – Moto G84 5G
மோட்டோ ஜி54 – Moto G54
மோட்டோ ஜி73 5ஜி – Moto G73 5G
மோட்டோ ஜி53 5ஜி – Moto G53 5G
மோட்டோ ஜி23 – Moto G23
மோட்டோ ஜி14 – Moto G14
எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்:
மோட்டோரோலா எட்ஜ்+ 2023 – Motorola Edge+ 2023
மோட்டோரோலா எட்ஜ் 2023 – Motorola Edge 2023
மோட்டோரோலா எட்ஜ்+ 2022 – Motorola Edge+ 2022
மோட்டோரோலா எட்ஜ் 2022 – Motorola Edge 2022
மோட்டோரோலா எட்ஜ்+ 5ஜி UW – Motorola Edge+ 5G UW 2022
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ – Motorola Edge 40 Pro
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ – Motorola Edge 40 Neo
மோட்டோரோலா எட்ஜ் 40 – Motorola Edge 40
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா – Motorola Edge 30 Ultra
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ – Motorola Edge 30 Pro
மோட்டோரோலா எட்ஜ் 30 நியோ – Motorola Edge 30 Neo
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் – Motorola Edge 30 Fusion
மோட்டோரோலா எட்ஜ் 30 – Motorola Edge 30