Banana Kola Urundai Gravy: பார்த்தாலே பிடிக்கும் வாழைக்காய் கோலா உருண்டை குழம்பு.. ருசி ஆளை தூக்கும் பாருங்க!

தேவையான பொருட்கள்

வாழைக்காய்

வெங்காயம்

தக்காளி

உப்பு

பச்சை மிளகாய்

மிளகாய் தூள்

மல்லித்தூள்

இஞ்சி பூண்டு விழுது

கொத்தமல்லி

புதினா

கரம் மசாலா பொடி

மஞ்சள் பொடி

சீரகப்பொடி

கடலை மாவு

புளி

சோம்பு

செய்முறை

2 வாழைக்காயை குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக 3 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும் . சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வாழைக்காயை தோல் நீக்கி நன்றாக பொடித்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் டீ ஸ்பூன் மஞ்சள் பொடி, தனி மிளகாய் தூள் கால் டீ ஸ்பூன், கால் டீ ஸ்பூன் சீரக பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய ஒரு கைபிடி மல்லி இலைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதில் 3 ஸ்பூன் கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதில் தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்தோ, அல்லது கடலை மாவு சேர்த்தோ நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கோலா உருண்டைகளை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உருண்டைகள் மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும்.

பொரித்த கோலா உருண்டைகளை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, கல் பாசி சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் ஒரு வெங்காயம் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். வெங்காயம் பச்சை வாடை போக ஆரம்பிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் இரண்டு தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும் மசாலா பச்சை வாடை போன பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அரை முடி தேங்காயை பால் எடுத்து அதையும் சேர்த்து கொள்ள வேண்டும். குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது அதில் கோலா உருண்டையை சேர்தது கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். கடைசியாக அதில் மல்லி இலையை சேர்த்து இறக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான வாழைக்காய் கோலா உருண்டை குழம்பு ரெடி

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பு அருமையாக இருக்கும் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *